Love story tamil: தனது காதலுக்காக 7000 கி.மீ. சைக்கிள்லில் பயணம் செய்த காதல் மன்னன்.

love story tamil
ஒரு இளைஞன் தன் காதலுக்காக 7000 கிமீ மிதிவண்டியில் பயணிக்கிறான்.இது ஏதோ ஒரு திரைபடத்தில் வரும் காட்சி அல்ல.இது பிரதியுமன குமார் மஹானந்தியாவின் (Pradhyumna kumar mahanandhiya) காதல் பயணம்.காதல் ஒருவனை எதுவரை வேண்டுமானாலும் கூட்டிச் செல்லும் என்பதற்கு இக்கதையேச் சான்று.காதலுக்காகப் பல தேசங்களைக் மிதிவண்டியில்  கடந்துச் சென்ற காதல் மன்னன் p.k.மஹானந்தியா. 
தறப்போதுள்ள ஒடிசா மாநிலதில் அங்குல் என்ற மாவட்டத்தில் மகாநதி தீரத்திலே கந்தபாடா என்ற ஒரு மலைக் கிராமத்தில் 1949ல் p.k.மஹானந்தியா பிறந்தார்.சாதிக் கொடுமைகளைச் சந்தித்த மஹானந்தியா அக்கிராமத்தை விட்டு வெள்ளியூர் செல்லத் திட்டமிட்டார். அக்கிராமத்தில் உள்ள ஜோதிடரைச் சந்தித்த மஹானந்தியா தன் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.ஜோதிடர் அவரிடம்,
”உனக்கும் நிறங்களுக்கும் தொடர்பிருக்கிறது. 
உன் காதல் தேவதைக் கடல் கடந்து வருவாள்.
உன் காதல் தேவதைக்கும் இசைக்கும் நிறைய தொடர்பிருக்கிறது, அவள் ஒரு வனத்திற்கே சொந்தகாரி” என்றார்.

ஒடிசா கலைக் கல்லூரியில் ஓவியம் சார்ந்தப் பட்டப் படிப்பை முடித்தார் p.k.மஹானந்தியா.அவர் ஓவியம் வரைவதில் வல்லவராக இருந்தார். தனது பிழைப்புக்காகத் தலைநகர் டெல்லி சென்றார்.டெல்லி காணட் பகுதியில்லுள்ள நடைமேடையில் மக்களின் ஓவியங்களைப் பத்து ரூபாய்க்கு வரைந்தார்.அந்த நடைமடை தான் மஹானந்தியாவுக்கு உறைவிடமாகவும் அமைந்தது.அவரது ஓவியங்கள் தத்துருபமாக இருந்ததால் அவரைத் தேடி மக்கள் வரத்தொடங்கினார்.அவரது ஓவியக்கலை அவருக்குச் சிறுது புகழைத் தேடித் தந்தது.

இக்கதையின் கதாநாயகி சார்லட் வான் ஷெட்வின்(Charlotte Von Schedvin) சுவீடன் நாட்டில் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்த்தவர்.வீட்டில் இருக்கும் கோனார்க் கோவிலின் தேர் சக்கரத்தின் படத்தைப் பார்த்து வியந்து இந்தியாவுக்கு பயணம் செல்ல முடிவெடுதர்.சார்லட் தன் தோழிகளுடன் இந்தியாவிர்க்குப் பயணம் மேற்கொண்டார்.விதி வலியது என்பார்கள் அது உண்மை தன் போலும், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு வந்த சார்லட் p.k.மஹானந்தியாவின் ஓவியத் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கக் டெல்லியில் உள்ள காணட் பகுதிக்குச் சென்றார்.சார்லட்டைப் பார்த்தவுடன் மஹானந்தியாவுக்கு இதயம் படபடவெனத் துடிக்க, சார்லட்டை பார்த்த காதல் மயக்கத்தில் கண்ணிமைக்காமல் அப்படியே நின்றார்.
சார்லட்,”நீங்கள் தான் மஹானந்தியாவா?” என்று கேட்டார். காதல் மயக்கத்திலிருந்து தெளிந்த மஹானந்தியா,
”ஆமாம் நான் தான்”என்றார். 
“என் படத்தை வரைந்து தருவீர்களா?” என்று கேட்டார் சார்லட்.
love story tamil
 மஹானந்தியா சார்லட்டின் படத்தை வரையத் தொடங்கினார். தன் காதல் தேவதையைக் கண்டவுடன் மஹானந்தியாவுக்கு கை நடுங்கியது;படம் சரியாக வரவில்லை.மீண்டும் சார்லட்டை நாளை வருமாறு கூறினார்.அடுத்தநாள் சார்லட் மஹானந்தியாவைப் பார்க்க வந்தார்.சார்லட்டிடம் தன் காதலைச் சொல்லலாமா வேண்டாமா என்ற பதட்டத்துடன் சார்லட்டை வரையத் தொடங்கினார் மீண்டும் படம் சரியாக வரவில்லை. மீண்டும் சார்லட்டை நாளை வருமாறு கூறினார்.சார்லட் சற்றுக் கோபத்துடன் அங்கிருந்துப் புறப்பட்டார். ஏனோ தெரியவில்லை சார்லட் மீண்டும் மூன்றாவது முறையாக மஹானந்தியாவைப் பார்க்க வந்தார். இம்முறை தன்னுள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சார்லட்டிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார் மஹானந்தியா,
“நீங்கள் இந்தியாவை சேர்ந்தவரா?”
“இல்லை” என்றார் சார்லட்.
“உங்களுக்கும் இசைக்கும் தொடர்பிருக்கிறது. நான் சொல்லவது சரியா?” என்றுக் கேட்டார் மஹானந்தியா.
“ஆமாம்!” என்றார் சார்லட்.
”கடைசிக் கேள்வி, உங்களுக்குச் சொந்தமாகக் காடு இருக்கிருறதா?” என்று கேட்டார்.
ஆச்சரியத்துடன், “ஆமாம்!” என்றார் சார்லட்.
“நான் தான் உங்கள் வருங்காலக் கணவர்” என்று தன் காதலை வெளிப்படுத்தினார் மஹானந்தியா.
காதலோடுச் சேர்த்துத் தான் வரைந்த சார்லட்டின் அழகியப் படத்தையும் கொடுத்தார்.
அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியத்துடன்,
”இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்டார் சார்லட்.
தன் கடந்தக்காலத்தைப் பற்றிக் கூறினார் மஹானந்தியா.இருவரும் நண்பர்களானர்கள்.மஹானந்தியா, சார்லட்டை தன் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். மஹானந்தியாவின் மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, மஹானந்தியாவின் குணம் அனைத்தையும் இரசிக்கிறார் சார்லட்.அந்த இரசனை ஈர்ப்பாகவும் அந்த ஈர்ப்புக் காதலாகவும் மாறியது.இருவரும் காதல் பறவைகளாகச் சுற்றுப்பயணம் செய்தனர். வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டனர்.காலம் வேகமாகக் கடந்தது மூன்று மாதங்கள் பிறகு சார்லட் தன் பயணத்தை முடித்துக்கொண்டுப்  பெற்றோரின் சம்மதத்தைப் பெற சுவீடன் சென்றார்.ஆனால் சார்லட்டின் பெற்றோர் இதற்க்கு சம்மதிக்கவில்லை இருபினும் அவர்களதுக் காதல் கடிதங்கள் கடல் தாண்டிப் பறந்தது. இப்படியேக் காலம் உருண்டோடுகிறது. 

P.k.மஹானந்தியா, காதல் மனைவியைக் காணத் துடித்தார்.அவரிடம் விமானதில் செல்லும் அளவுக்குப் பணமும் இல்லை.அதனால் அவர் சுவீடன் வரை மிதிவண்டியில் செல்ல முடிவெடுதார் கொஞ்சம் கிறுக்குதனமாக இருந்தாலும் காதல் மனைவிக்காக அவர் பயணிக்க முடிவெடுத்தார்.அதற்காகத் தனிடம் இருந்தப் பணத்தில் ஒரு மிதிவண்டியையும் வாங்கினார்.கையில் வழிச் செலவுக்காக ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு தன் பயணத்தை டெல்லியில்லிருந்துத் ஜனவரி 22 1977ல் தொடங்கி ஆப்கனிஸ்தான் வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
மஹானந்தியா, மிதிவண்டியில் நாளொன்றுக்கு 70கிமீ பயணித்தார். நெடுந்தூரப் பயணத்தில் அவருடன் வழித்துணையாய் வந்தது சார்லட் எழுதியக் காதல் கடிதங்கள் தான். அவர் வழிச் செலவுக்கு ஓவியமும் அவருக்குக் கைக்கொடுத்தது.நான்கு மாதப் பயணத்திற்க்குப் பிறகு மே 28 1977ல்  சுவீடன்னைச் சென்றடைந்தார்.சார்லட்டும் மஹானந்தியாவும் சந்தித்தவுடன் கட்டியணைத்து தன் காதலைப் பகிர்ந்துக்கொண்டனர்.இருவர் கண்களிலும் ஆனந்தத்தில் கண்ணீர் வழிந்தோடியது. மஹானந்தியாவின் காதலின் ஆழத்தைப் புரிந்துக்கொண்ட சார்லட்டின் தந்தை அவர்களது காதலுக்கு சம்மதித்தார்.இருவரும் சுவீடன் நாட்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.இன்றும் p.k. மஹானந்தியாவும் சார்லட்டும் இணைப்பிரியதாக் காதல் பறவைகளாகச் சுவீடனில் வாழ்கிறார்கள்.
 
  ஒரு மனிதனைக் காதல் எவ்வளவுத் தூரம் வேண்டுமானாலும் கூட்டிச் செல்லும்.எல்லைகளைக் கொண்டு காதலை அடைக்க முடியாது.

நீங்களும் காதலிக்கலாம், இந்தப் பக்கத்தையும் இந்தப் பக்கதில் வரும் பதிவுகளையும். 

Post a Comment

0 Comments