Thaen(2021) movie review Tamil: தேன் திரைவிமர்சனம் (2021)

thaen movie review

‘தேன்’ தமிழ் திரைப்பட இரசிகர்களுக்குக் கிடைத்த தேன். OTT தளதில் மார்ச் 19 தேதி வெளியானது. தகராறு, வீர சிவாஜி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கணேஷ் விநாயகன்னின் இன்னொரு படைப்பு ‘தேன்’. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடியச் சிக்கலை மய்யப்படுத்தி எடுக்கப்பட்டப் படம்.இப்படதில் தருண் குமார், அபர்னதி, பாவா லக்ஷ்மணன் ஆகியோர் முக்கியக் கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்:

அடிப்படை வசதிகளற்ற ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் இளைஞர் வேலு(தருண் குமார்) தேன் சேகரித்து தனது வாழ்க்கையை நடத்திவருகிறார்.தனது மனைவி பூங்கொடிக்கு(அபர்னதி) நோய் தொற்று ஏற்படுகிறது. நகரதில் இருக்கும் மருதுமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார். சிகிச்சைக்காக மருத்துவக் காப்பீட்டு அட்டை தேவைப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பெற அவர் படும் துயரங்களை இப்படம் எடுத்துரைக்கிறது. அவர் தன் மனைவியைக் காப்பாற்றினாரா இல்லையா? என்பது மீதி கதை.

திரைப்படத்தின் பார்வை:

‘தேன்’ குறுஞ்சிக்குடி என்னும் மலைக் கிராமத்தில் வசிக்கும் வேலு தேன் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். வேலு பூங்கொடியின் நோயுற்ற தந்தைக்காகத் குறுஞ்சித் தேனைச் சேகரித்து கொடுக்கிறார் அதனால் வேலுவின் மீது காதல் கொள்கிறார் பூங்கொடி. இருவரும் அவர்கள் முறைப்படி திருமணத்திற்காக தெய்வவாக்கு கேட்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்க்கு தெய்வத்தின் அனுமதி கிடைக்கவில்லை அதனால் ஊர் பெரியவர்கள் அவர்கள் திருமணத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனையும் மீறி வேலுவும் பூங்கொடியும் திருமணம் வாழ்க்கையில் இணைகின்றனர்.ஒருநாள் பூங்கொடிக்கு வயற்று வலி ஏற்படுகிறது.உள்ளூர் வைதியரிடம் சிகிச்சைக்காக பூங்கொடியை அழைத்துச்செல்கிறார் வேலு, வைத்தீயர் பரிசோதித்துவிட்டு நகரத்தில் இருக்கும் மருதுவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.

பூங்கொடியை நகரத்தில் உள்ள அரசு மருதுவமனைக்கு அழைத்துச்செல்கிறார் பூங்கொடியை பரிசோதித்த மருத்துவர், “இந்த நோயைக் குணபடுத்த அதிகம் செலவாகும் மருத்துவக் காப்பீட்டு அட்டை இருக்கிறதா?” என்று கேட்டக்கிறார். படிபறிவில்லாத வேலு அப்படியென்றால் என்ன கேட்டக்கிறார். எந்தவொரு அடையாளச் சான்றிதழும் இல்லாத வேலு  மருத்துவக் காப்பீட்டு அட்டைகாக விண்ணப்பிக்கச் செல்கிறார். படிக்காத வேலுவை அரசு அதிகாரிகள் அழைக்கழிக்கின்றனர். மருத்துவக் காப்பீட்டு அட்டை அவருக்கு கிடைத்ததா? அவர் மனைவியைக் காப்பாற்றினாரா? என்பதுதான் மீதி கதை. 

தருண் குமார் வேலு என்ற பாமரக் கதாப்பாத்திரத்தில் அருமையாக தனது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அவர் மருத்துவமனையில் கெஞ்சும் காட்சியில் உணர்வுபூர்வமாக தனது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அபர்னதி பூங்கொடி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் கிராமத்துப் பெண் பாணியில் தன் காதலை வெளிபடுதும் விதம் அவர் நடிப்பிற்க்கு ஒரு சிறந்தச் சான்று. இப்படத்தில் காட்சிப்படுத்தபட்டிருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலை மலைக்கிராமங்கள் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார். இப்படம் ஒரு பாமரன் அரசு அலுவலகங்களில் படும் துயரங்ளை அருமையாக எடுத்துரைக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயகன்.இப்படம் போலி சமூக ஆர்வலர்களை பற்றியும் பேசுகிறது. அரசு மருத்துவமனைகள் தரத்தைப் பற்றியும் அங்கு நடக்கும் முறைகேடுகள் ஆகியவற்றை ‘தேன்’ தெளிவாக எடுதுரைக்கிறது. பாவா லக்ஷ்மணன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  

குடும்பத்துடன் பார்த்து இரசிக்கக்கூடிய திரைப்படம் ‘தேன்’.

IMDB 8.3/10 

Post a Comment

0 Comments