Be like Walter

 




 

   பனி விழும் இரவு ஓர் இளைஞன் தன் வீட்டிலிருந்து வெளியே வேகமாக நடக்கிறான் அந்த இருள் சூழந்த இரவின் அமைதியில் அவன் இதயதுடிப்பு அவனுக்கு துல்லியமாக கேட்கிறது. அவன் தான் Walter இந்த கதையின் கதாநாயகன் Homewood என்ற நகரதில் தன் தாயுடன் வசித்து வந்தான் Walter.


         Walter

   அன்று அந்த நகரத்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, Kathrina புயல் தாக்கியதில் Walterரின் வீடு தகர்கப்பட்டது. அந்த புயலோடு சேர்த்து பேரிடியாக விழுந்தது அவனது தாயின் வேலையிழப்பு. அடுத்த வேலை உணவு,உறைவிடம் இல்லாமல் தவித்த Walter ஒரு வழியாக வாடகைக்கு ஒரு சிறிய வீட்டில் தன் தாயுடன் குடியேறினான்.





தன் வாழ்க்கையின் சக்கரத்தை சூழலச்செய்ய bellhops என்ற நிறுவனதில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தான். ஒருவழியாக அவனுக்கு அந்த நிறுவனதில் வேலை கிடைத்தது.அந்த நிறுவனம்,ஒரு வீட்டில் இருக்கும் பொருட்களை ஒரு இடதில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும் நிறுவனம்.


Walterக்கு அவன் வீட்டில் இருந்து 20மைல் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் காலை 7மணிக்கு முதல் நாள் பணி ஒதுக்கபட்டிருந்தத்து நிம்மதி பெருமூச்சுடன் Walter தனது பழையக் காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான் இருபினும் அவன் துரததிஷ்டம் அவனை துரத்தியது அவனது பழையக் கார் பழுதானது,செய்வதறியாது நின்ற Walter அந்த காரை அங்கேயே விட்டுவிட்டு நடைபயணமாகத் தன் வீட்டிற்கு சென்றான் Walter. Walterஇன் மனதில் ஓடிக்கொண்டிருந்தக் கேள்வி, “நாளைப் பணிக்கு எப்படி செல்வது?” அதிகாலை நேரதில் அந்த நகரத்தில் பேருந்து வசதியும் இல்லை ஆனால், அவனுக்கு அந்த வேலையை விடவும் மனதில்லை அதனால் Walter பணிக்கு நடந்து செல்ல முடிவெடுத்தான் நடு இரவில் எழுந்து தன் காலை உணவையும் மறந்துத் தன் முதல் நாள் பணிக்கு மூச்சு இரைக்க நடந்துச் சென்றுக்கொண்டிருந்தான் அப்போதுத் தொலைவில் சிவப்பு நீலம் கலந்த வண்ண விளக்கு அவன் கண்களில் படுகிறது அதை பார்த்ததும் பதட்டமாகிறான் தொலைவில் வந்தது காவலரின் வாகனம் மெதுவாக அவன் அருகில் வந்து நிற்கிறது அதிலிருந்த காவலதிகரி அவனை பார்த்து “எங்கே செல்கிறாய்?” பதட்டதுடன் தன் கதையை கூறினான் Walter.இதை கேட்ட அந்த காவலதிகாரி Walterக்கு காலை உணவை கொடுத்து அவனை தனது வாகனதில் அவனுக்கு பணி ஒதுக்கபட்டிருந்த வீட்டில் இறக்கிவிட்டார்.

இதனை அறிந்த அந்த வீட்டின் உரிமையாளர் Jenifer Lamay இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கதில் பதிவிட்டார் இந்த சம்பவம் பட்டி தொட்டியெங்கும் பரவியது. #belikewalter என்ற hastag டிரெண்ட் ஆனது. இதனை அறிந்த Bellhops நிறுவனத்தின்    CEO Luke Marklin Walterக்கு புதிய காரை பரிசளித்தார்.




 வாழ்க்கையில் நாம் அர்ப்பணிப்புடன் ஒரு பணியை செய்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு Walter என்னும் இளைஞனின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

Inspired Writings 

Post a Comment

0 Comments