Methagu(2021): movie review Tamil

methagu movie review tamil
மேதகு 


‘மேதகு’(methagu)விடுதலைப் புலிகளின் தலைவர் மேதாகுவே பிரபாகரனின் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம்.ஜூன் 25 BS value OTT தளத்தில் வெளியானது.இத்திரைப்படம் Familymanக்கு உண்மையை உரக்கச் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர்:தி.கிட்டு

தயாரிப்பாளர்:ரியாஸ்(நிறுவனம்:தமிழீழ திரைக்களம்)

இசை:பிரவீன்

நடிகர்கள்:குட்டி மணி, இஷ்வர் பாஷா, ஆனந்தன், விஜய்.

இத்திரைபடம் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதாகுவே வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையையும் தமிழீழ விடுதலைப் போராட்டதில் அவர் எப்படி இணைந்தார் என்பதையும் கூறுகிறது.

கதைச் சுருக்கம்:

மதுரையில் தெருக்கூத்தில் கதைச் சொல்வது போல அமைந்துள்ளது.இலங்கையில் நடக்கும் தமிழர்கள்மீதான அடக்கு முறைகளையும், புத்த பிக்குகலின் இனவெறியையும் எதிர்த்து அமைதி வழியில் போராட்டம் நடைபெறுகிறது. அமைதி வழிப் போராட்டம் பயன்தராததால் ஆயுத வழிப் போராட்டதுக்கு இளைஞர்கள் தயாராகிறார்கள்.உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி ஒன்பது தமிழர்களைக் கொலைச் செய்கிறது சிங்கள காவல்துறை. அதற்க்கு காரணமான ஆல்ஃபிரட் துரையப்பாவை (Alfred Duraiappa) பழிதீர்தார்களா இல்லையா? என்பதுதான் மீதி கதை.

திரைக்கதை:

மேதாகுவே பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு சர்ச்சைகள் நிறைந்தது.தமிழ் திரைத்துறையில் எந்த முன்னணி இயக்குனரும் எடுக்காத முயற்சியைக் கிட்டு எடுதிருக்கிறார்.அவருக்கு இது முதல் படம் இருப்பினும் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார்.திரைக்கதையில் எந்தக் குறையும்மில்லை.ராஜாவேலு, பெருமாள் தெருக்கூத்துக் காட்சிகள் படத்திற்க்கு மேலும் வலுச் சேர்க்கிறது.வேலுபிள்ளை பிரபாகரன் கதாப்பாத்திரதில் நடித்த குட்டி மணி தன் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

 இசை:

 இசையமைப்பாளர் பிரவீன் தனது பின்னணி இசையால் அசத்தியுள்ளார்.அனைத்துப் பாடல்கலிலும் புரட்சிகரமான வரிகள் இடம்பெற்றுள்ளன.

ஒளிப்பதிவு: 

ரியாஸீன் ஒளிப்பதிவு இத்திரைபடத்துக்கு வலுச் சேர்க்கிறது.பெரிய பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இணையான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்.வயல் வெளியில் மயில் ஓடும் கட்சி, இவரது ஒளிபதிவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


‘மேதகு’ சிறிய பொருட்செலவில் எடுக்கபட்டிருந்தாலும் படக்குழுவினரின் முயற்சியால் படம் சிறப்பாக வந்துள்ளது.இப்படத்தில் வயதுவந்தோருக்கான(adult content)  எந்த ஒரு காட்சியும் இல்லை. குடும்பத்துடன் தவறாமல் பற்றக்கவேண்டிய ஒரு வாழ்க்கை வரலாற்று படம். 

IMDB 9.7/10


(இத்திரைப்படதிற்க்கு நான் கொடுத்த இந்த மதிப்புரை என்னுடையத் தனிப்பட்டக் கருத்து)      


Post a Comment

0 Comments